← முகப்புப் பக்கம்
Singam Startup நிறுவனர்

நான் ஏன் Singam Startup தொடங்கினேன்?

Founder, Singam Startup · தமிழ்நாடு தொழில்முனைவோருக்காக

காலை 9 முதல் மாலை 5 வரை வேலை. பல நாட்கள் இரவு 10 மணி வரை நீளும். குடும்பத்துடனும் குழந்தைகளுடனும் செலவிட நேரமில்லை; உடற்பயிற்சிக்கும் நேரமில்லை; உடல்நலமும் பாதிக்கப்பட்டது. வேலை என்னை உறிஞ்சிக்கொண்டே இருந்தது.

அப்போதுதான் ஒரு தொழில்முனைவோராக வேண்டும், மற்றவர்களுக்கும் வழிகாட்ட வேண்டும் என்ற ஆசை வந்தது. ஆனால் வழி தேடியபோது ஒரு பெரிய வெற்றிடம் தெரிந்தது: தமிழில், நம் பகுதிக்கு ஏற்ற, தெளிவான தொழில் வரைபடங்கள் (blueprints) எங்கும் இல்லை.

அதனால் நானே தகவல்களைத் தேடி, சேகரித்து, என் நேரத்தையும் பணத்தையும் செலவிட்டு Blueprints தயாரிக்கிறேன். ஒவ்வொன்றிலும் வாய்ப்புகளை மட்டுமல்ல, தடைகளையும் சிக்கல்களையும் (bottlenecks) வெளிப்படையாகவே சொல்கிறேன்.

நீங்கள் ஜெயிக்க வேண்டும். நானும் ஜெயிக்க வேண்டும்.
Grow Together 🤝

இணையத்தில் இலவசமாகக் கிடைப்பவை பல குழப்பமாகவும் தரம் குறைவாகவும் இருந்தன. அதனால்தான் சில Blueprints இலவசம்; ஆழமான முழு வழிகாட்டிகளுக்கு நியாயமான கட்டணம். இது என் உழைப்புக்கும் நேரத்துக்கும் ஆதரவு — இந்த வேலையைத் தொடர்ந்து செய்யவும் அதுவே உதவுகிறது.

தமிழ்நாடு ஒரு ட்ரில்லியன் டாலர் பொருளாதாரமாக வளரும் கனவில், நம் எல்லோருடைய பங்கும் இருக்கட்டும்.